அஜித் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்?

Web Ads

கார்த்தி, சூர்யா, கமல், ரஜினி ஆகியோரை இயக்கிய லோகேஷ் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கும் விருப்பத்தை முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இதனால், லோகேஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்தது. இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்க முன்வந்திருக்கிறது.

இப்படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை அஜித்-லோகேஷ் கனகராஜ் சந்திப்பு நடைபெறவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். விரைவில் நடைபெறும் சந்திப்பில் இந்தக் கூட்டணி உருவாகுமா என்பது தெரிந்துவிடும். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் ‘டிசி’ படத்தில் நாயகனாக கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ். இப்படம் கேங்ஸ்டர் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது.

ajith is reportedly set to star in lokesh kanagaraj next film
ajith is reportedly set to star in lokesh kanagaraj next film