தல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் என்பதை தாண்டி அஜித் ஒரு பைக், கார் ரேசர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் நடிக்கும் படங்களில் இடம் பெரும் பைக் மற்றும் கார் ரேஸிங் சீன்கள் ரியலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம்.

தற்போது தல அஜித்தின் புகைப்படம் ஒன்றினை ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வு பயன்படுத்தியுள்ளது தமிழக அரசு.

இதற்காக கோவை மாநகராட்சிகளில் அஜித் புகைப்படம் இடம் பெற்றுள்ள பேனர்கள் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் புகைப்படங்களை தல ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.