பீஸ்ட் பட ப்ரோமோ வீடியோவில் தல அஜித் இடம் பெற்று இருப்பதை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Ajith in Beast Promo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என ப்ரோமோ வீடியோவோடு அறிவிப்பு வெளியானது. இதில் அனிருத்தின் ஸ்டூடியோவில் அவருக்கு பின்புறத்தில் விவேகம் படத்திற்காக விருது வாங்கிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் பட ப்ரோமோ வீடியோவில் தல அஜித் என கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.