தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர். எந்தவொரு பொது நிகழ்ச்சி, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி என எதிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் பலம் என்றும் குறைந்ததில்லை.

மேலும் வாழ் வாழ விடு என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழ்ந்து வருபவர். இவருடைய ரசிகர்களும் அஜித்தின் வழியை பின்பற்றி செய்திருக்கும் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

திருப்பூரில் சக்தி என்ற நபர் இரு கைகளையும் இழந்து வாழ்வாதாரத்திற்காக தவித்து வந்துள்ளார். அவருடைய வாழ்க்கைக்கு உதவும் வகையில் அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து அவருக்கு பெட்டி கடை ஒன்றினை வைத்து கொடுத்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.