துணிவு திரைப்படத்தின் ஐம்பதாவது நாளை கொண்டாடிய அஜித் ரசிகர்களின் வீடியோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளியான இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாகி இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் 50 வது நாளை திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன்படி திரையரங்கில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சில்லா சில்லா பாடலுக்கு ஸ்கிரீன் முன் ஏறி நின்று உற்சாகத்துடன் ரசிகர்கள் டான்ஸ் ஆடி கொண்டாடியுள்ள வீடியோ தற்போது இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.