
ஸ்காட்லாந்தில் ஹாயாக ஊர் சுற்றும் அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் நடிகர் அஜித் ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அஜித் ஹாயாக ஊர் சுற்றி வரும் புகைப்படங்களும் கார் ஓட்டும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் லைக்குகளை குவித்து வருகிறது.