AJith and Vaibhav

AJith and Vaibhav :

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் அஜித் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தில் அஜித்துக்கு அடுத்தபடியாக அதிக காட்சிகளில் இடம்பிடித்தவர் வைபவ். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது: “எனக்கு பைக் பயணம் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் அஜித்துக்காகதான் அந்த காட்சியில் நடித்தேன்.

AJith and Vaibhav
AJith and Vaibhav

முதல்முறையாக பைக் பயனம் அதுவும் மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் அஜித் பைக்கை ஓட்டி வருகிறார். எப்படி இருந்திருக்கும்? அதை நினைத்தால் இப்போதும் எனக்கு நடுக்கும் ஏற்படும்.

இனி அப்படியொரு காட்சியில் நடிக்க சொன்னால் என்னால் முடியவே முடியாது” என்றார்.

மேலும் மங்காத்தா 2-வில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அது எப்படி நான்தான் முதல் பாகத்தில் இறந்து விடுவேனே என்றும் வைபவ் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.