அஜித் 62 திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே அஜித் 63 பட இயக்குனரை தேர்ந்தெடுத்தெடுள்ளார் அஜித்.

Ajith 63 Movie Director Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 62 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ள நிலையில் விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் அஜித் தன்னுடைய அடுத்த படமான 63வது படத்திற்கான இயக்குனரைத் தேர்வு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாம் இயக்குனர் விஷ்ணுவரதன் அஜித் 63 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் 62 படத்தை இயக்குவதற்கு விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அவர் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் அஜித் படத்தை இயக்க முடியாத காரணத்தினால் அஜித்தின் 63 வது படத்தை கண்டிப்பாக இயக்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.