அஜித் 62 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு.

எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வரை கிட்டத்தட்ட 300 கோடி வரை இந்த படம் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் வந்து இயக்கத்தில் நடிக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் எனவும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.