
அஜித் 62 படத்தில் வில்லனாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தின் நடிக்க இருந்தார்.

ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் அருள்நிதி என இருவரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் மகிழ்த்திருமேனி உடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனால் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இது குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.