அஜித் 62 பூஜை சமீபத்தில் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தனது 62 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த படத்தில் இருந்து அவர் வெளியேற அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த பூஜையில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள அஜித் மட்டும் மிஸ்ஸிங் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் படத்திற்கு மூன்று டைட்டில்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த மூன்றில் ஒன்று தான் படத்துக்கு டைட்டிலாக அமைய இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படம் குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாற்றியுள்ளன.