Ajith 60 Movie

Ajith 60 Movie : அஜித்தின் அடுத்த படம் குறித்து போனி கபூருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். ஆனால் போனி கபூர் இதனை ஏற்பாரா? என்பது தெரியவில்லை.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை பார்த்து விட்டு போனி கபூர் படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் மீண்டும் அஜித்துடன் பணிபுரிய ஆசைப்படுவதாகவும் அவருக்காக 3 கதைகள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும் அஜித்தை பாலிவுட் சினிமாவிற்கு அழைத்து செல்ல ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு கோரிக்கை ஒன்றை வைத்து வருகின்றனர்.

அதாவது அஜித்தை வைத்து ஹிந்தியில் படம் தயாரிப்பதாக இருந்தால் தூம் 4 படத்தை எடுங்கள் என கூறி வருகின்றனர்.

அஜித் ரசிகர்களின் கோரிக்கையை போனி கபூர் ஏற்பாரா? தூம் 4 உருவாகுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.