
Aishwarya Rajesh Tweet : கனா படம் மட்டும் தான் உண்மையான வெற்றி என பேசியதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகி இருந்த படம் கனா.
கடந்த டிசம்பர் 21-ம் தேதி வெளியாகி இருந்த இந்த படம் மகளிர் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் எதார்த்தமாக பேசியதால் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.
இதனையடுத்து சமீபத்தில் சென்னையில் நடந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய போது கனா மட்டும் தான் உண்மையான வெற்றி.
ஓடாத படங்களுக்கு எல்லாம் தற்போது வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என பேசி இருந்தார். இதனையடுத்து பேசிய சத்யராஜே இதனை கண்டித்து இருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்படி ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டுக்காக பேசியது என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Hi guys. It’ was jus a fun. Speech for #KanaaSuccessMeet I din. Mean. Any movie. Here. an. Neve hurt anyone I always . Pray for all d movies to become blockbuster hit .. I know how hard it is to make a movie an make it huge. Success. Really sorry if my statement hurt. Any….
— aishwarya rajessh (@aishu_dil) January 8, 2019
