டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், ஜமுனா படத்திற்கான பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அப்போது பேட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா? என்பதுபோல் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஏங்க இது என்ன வம்பா இருக்கு? நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். கதாநாயகன் இல்லாமல் படம் வேண்டாம் என்று நான் முடிவு செய்துநடிக்கவில்லை. நல்ல கதையம்சம் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த மாதிரியான கதைகள் அமைவதால் தொடர்ந்து அவ்வாறு நடித்து வருகிறேன். லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் நான் அப்படி செய்யவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை’ என பதில் அளித்துள்ளார்.