Aishwarya Rai Dress gets bad Reviews :

கேன்ஸ் விழாவின் ஆதர்ச நாயகியான ஐஷ்வர்யா ராய், தற்போது இந்த ஆண்டிற்கான சிகப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

வருடந்தோறும் பிரான்ஸில் மே மாதம் நடைபெறும் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டும் கடந்த 14-ம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதில் இருந்தும் குவியும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள்..

அதை காண வரும் ஏராளமான திரை பிரபலங்கள் என கேன்ஸ் விழா ஒவ்வொரு ஆண்டும் திரை ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெறும்.

இந்தமுறை அது நடக்கவே கூடாது – தர்பாரில் கடும் எச்சரிக்கையோடு முருகதாஸ்!

பிரசதிபெற்ற இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணி நாயகிகள் விதவிதமான ஆடைகளில் வண்ணமயமாக காட்சியளிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் என விழா தொடக்கத்திலேயே பாலிவுட்டின் முன்னணி நாயகிகள் பங்கேற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்றனர்.

இந்த நிலையில் கேன்ஸ் விழாவின் ஆதர்ச நாயகியான ஐஷ்வர்யா ராய், தற்போது இந்த ஆண்டிற்கான சிகப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

முதல்நாளில் தங்க நிற ஆடையில் தனது மகள் ஆராதனாவுடன் பங்கேற்ற ஐஷ்வர்யா ராய், இரண்டாம் நாளில் வெள்ளை நிற உடையில் தேவதை தோற்றத்தில் கண் கவரும் விதம் வலம் வந்தார்.

ஆனால் இதில் அவருடைய உடை பாம்பு போல இருந்ததால் இவரை நெட்டிசன்கள் உலக அழகி என்று கூட பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து வருகிறார்கள்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.