நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்ய லட்சுமி. மலையாள திரை உலகை சார்ந்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் வெளியான கட்ட குஸ்தி, பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கிங் ஆப் கோத்தா’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்ய லட்சுமி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற கிங் ஆப் கோத்தா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக அணிந்திருந்த ஆடையில் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.