நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்ய லட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிசயமானார்.

தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தால். அதன் பிறகு, மிகவும் சவாலான மற்றும் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தரமான படங்களில் நல்ல கதாபாத்திரம் என்றால் சிறிய ரோலில் கூட நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.