பிக் பாஸ் நிகழ்ச்சியின் வைல் கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்திருப்பவர் நடிகை விஜி. இவர் உள்ளே சென்றதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார். அதே சமயம் மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோரிடம் என்நேரமும் சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

சமீபத்தில் பிக் பாஸ் தனித்தனியாக கொடுத்திருந்த டாஸ்கில் விஜியை டாஸ்க் செய்ய விடமால் செய்வதற்காக ஐஸ்வர்யா செய்த வேளைகளில் மிகவும் மோசமான ஒன்றை விஜய் டிவி ஒளிபரப்பாமல் மறைந்துள்ளது.

ஆம், விஜி டாஸ்க் செய்த போது ஐஸ்வர்யா ஸ்ப்ரே எடுத்து விஜியின் முகத்தில் அடித்துள்ளார். இந்த காட்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவில்லை. இதனை விஜியின் கணவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் தான் இப்படியெல்லாம் கொடுமை செய்துள்ளீர்கள். இப்போது என்னை மட்டும் மோசமாக நடத்துகிறார்கள் என்று பேசி அழுவதில் நியாயம் இல்லை என ஐஸ்வர்யாவை விமர்சித்து வருகின்றனர்.