Sarkar Promotion

Sarkar Promotion : படம் நல்லா தான் போயிட்டு இருக்கு உங்க ப்ரோமோஷன் வேணாம் என டிவீட் செய்து அதிமுக அரசை கலாய்த்துள்ளார் பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவர்.

தளபதி விஜயின் சர்கார் படத்தில் அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் அமைத்திருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

தளபதி விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்வோம் எனவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதனால் சர்கார் படத்திற்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் பேசி வருகின்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட மிக பெரிய ஜாம்புவான்களும் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரோகினி தியேட்டர் உரிமையாளரான ரேவ்நாத் சரண் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் படம் நல்லா தான் போயிட்டு இருக்கு, இப்போ ப்ரோமோஷன் வேணாம். வேணும்னா சொல்லுறோம் அப்போ பேசுங்க என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.