AGS

பிரபல திரையரங்குகளில் ஒன்றான AGS நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டரில் பிஸ்கட் பாக்கெட்கள், சமைக்கும் பாத்திரங்களை பாத்ரூமில் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திரையரங்குகளை கொண்ட நிறுவனம் AGS. மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ள இந்த நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள AGS சினிமா தியேட்டரில் ஊழியர்கள் பிஸ்கட் பிஸ்கட் பாக்கெட்கள், சமைக்கும் பாத்திரங்களை பாத்ரூமில் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை படத்தை பற்றிய மக்கள் கருத்துகளை பதிவு செய்ய சென்றிருந்த சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

இது குறித்து அந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்ப அவர்களும் சிரித்து கொண்டே கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பதில் கூறுகின்றனர்.

தற்போது இந்த வீடியோ குறித்து AGS நிறுவனத்தின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது போன்ற சம்பவங்கள் எங்களது திரையரங்குகளில் நடைபெறுவதில்லை எனவும் உணவு பொருட்களை மிகவும் சுத்தமான இடத்திலேயே பராமரிக்கிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.