நடிகர் அஜித்குமார் தனது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்பொழுது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK61 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனக்கான படப்பிடிப்பு பணிகளை முடித்த பிறகு ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தனது நண்பர்களுடன் இணைந்து சுமார் ஒரு மாத காலம் பைக்கில் பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பயணத்தில் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் சென்று இருந்தார்.

இவர்களது இந்த சுற்றுலா பயணத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வந்ததை தொடர்ந்து நேற்று இரவு தனது சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நடிகர் அஜித்குமார் தற்பொழுது மீண்டும் சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.