பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அசீம் மற்றும் விக்ரமன் குறித்து ADK பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் கடைசி எலிமினேஷனில் ஏடிகே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ADK அசீம் மற்றும் விக்ரமன் குறித்து பதிவு செய்துள்ளார். அசீமுன் அடிக்கடி சண்டை போட்டாலும் ராம், விக்ரமன் அடுத்ததாக அவர்தான் நல்ல நண்பர் என தெரிவித்துள்ளார். மேலும் நண்பர்களுக்கிடையே இதெல்லாம் சாதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விக்ரமனுடன் முதலில் நெருங்கி பழகாத ஏடிகே அதன் பிறகு நல்ல நண்பராகிவிட்டார். இருந்த பதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நந்தினியிடம் தனக்கு விக்ரமனை சுத்தமாக பிடிக்கவில்லை என கூறினார். இது குறித்து கமல் கேட்டதற்கு கூட மறந்து விட்டதாக சொல்லி சமாளித்து விட்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் ஏதோ உணர்ச்சிகர குழப்பத்தில் வெளியே வந்து விட்டேன், விக்ரமன் நல்ல நண்பர் அவரைப்பற்றி நான் என்றும் தாழ்த்தி பேசியதில்லை என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.