நடிகை அதிதி சங்கர் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தளபதி விஜய் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘விருமன்’. இதில் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் அவர்களின் மகளான அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே முன்னணி நடிகை போல் ரசிகர்களின் மனதில் சட்டென்று இடம் பிடித்த இவர் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கலந்து கொண்ட அதிதி சங்கர் டாப் ஹீரோவான தளபதி விஜய் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அதிதி சங்கர், விஜய் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் சாருடன் சேர்ந்து நடனம் ஆடுவது தனது ஆசை என்றும் கூறியிருக்கிறார். மேலும் விஜய் அவர்களின் நடனத்தை பார்த்து நான் மிரண்டு போய் உள்ளேன். அதுவும் அவரது நடனத்திற்கு திரையரங்கில் ரசிகர்கள் செய்யும் சேட்டைகளையும் கரகோஷங்கள் பார்த்து வியந்துள்ளேன்.

அதனால் கண்டிப்பாக விஜய் அவருடன் நான் சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ள அதிதி சங்கர் தனக்கு விஜய் அவர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கூடிய விரைவில் கிடைக்கும் என நம்பி இருப்பதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஏனெனில் விஜய் சார் போன்ற பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் பொழுது சில விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இப்படி வேகமாக டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்படும் அதிதி சங்கரின் ஆசையைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.