இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூரிக்கு நடிகை அதிதி சங்கர் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். அவரது பதிவிற்கு ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் சூரி. இவர் ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பிரம்மாண்ட இயக்குனராகத் திகழும் சங்கர் அவர்களின் மகளான அதிதி சங்கர் நடிகர் சூரிக்கு “ஹாப்பி பர்த்டே சார்” என்ற பதிவோடு விருமன் படப்பிடிப்பு தளத்தில் சூரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் சம்பந்தமே இல்லாமல் அதிதி சங்கரை கண்டமேனிக்கு மீம்ஸ்களை கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.