நடிகை அதிதி சங்கர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் அதிதி சங்கர். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.