வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் அதிதி சங்கர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகையாக திகழ்பவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் அவ்வபோது எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்டிங்காகி வருகிறது.