
Adchi Thookku Records : விஸ்வாசம் சிங்கிள் டிராக்காக வெளியாகியுள்ள அடிச்சு தூக்கு பாடல் நேற்று மாலை இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
டி.இம்மான் இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் நேற்று இரவு 7 மணிக்கு யூ ட்யூபில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இப்படம் வெளியான 12 மணி நேரத்தில் யூ ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தையும் பப்லிக்காக 3.3 மில்லியன் பார்வையாளர்களையும் ரியல் டைமில் 3.5 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் 439K லைக்ஸ்களையும் குவித்துள்ளது. 64K டிஸ் லைக்குகளையும் பெற்றுள்ளது.
முதல் முறையாக டி.இம்மான் இசையில் உருவாகியுள்ள அஜித்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களை போலவே திரையுங்க பிரபலங்களும் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.