நடிகை திரிஷா நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. சவுத் குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா அடுத்தபடியாக நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது. அதன்படி நடிகை திரிஷா ‘சிகரம் தொடு’ படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் “கொலை வழக்கு” என பெயர் வைக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பெண்களை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.