இயக்குனர் மணிரத்தினத்துடன் நடிகை திரிஷா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Actress Trisha new movie update viral:

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். சவுத் குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் ஏராளமான டாப் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். சிறிது காலம் முதன்மை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கம் பேக் கொடுத்திருந்தார்.

அதன் பிறகு பிஸியான நடிகையாக மாறியுள்ள இவர் தற்போது விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.