தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த நடிகை டாப்சி தன்னுடைய சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி உள்ளார்.

Actress Tapsee Salary : தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் டாப்சி. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் அடுத்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

தற்போது இந்தியில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். நல்ல கதைகளை கொண்ட படமாகவும் தன்னுடைய கதாபாத்திரம் பேசும் கதையாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக ராஷ்மி ராக்கெட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மாதாந்திர பயண அட்டையை, ஜூலை 15 வரை பயன்படுத்தலாம் : தமிழக போக்குவரத்துத் துறை

விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இத்திரைப்படம் பேச உள்ளது. இந்த படமும் டாப்சிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith-தை வச்சு நானும் படம் எடுத்து இருக்கேன்! – Actor Singam Puli Speech | Thala Ajith | Valimai

தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் டாப்ஸி இதுவரை 5 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது அதனை எட்டு கோடியாக உயர்த்தி உள்ளார். ஒரே அடியாக 3 கோடி சம்பளத்தை உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.