ஜெய்லர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கும் கிளிம்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மேலும் பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றன. இதனால் இப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து பகிர்ந்திருக்கும் கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.