Actress Sneha latest photo

மாடர்ன் உடையில் மாசான லுக்கில் சினேகா புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Sneha latest photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவர் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் ஆனந்தம், புன்னகை தேசம், ஆட்டோகிராஃப், பார்த்திபன் கனவு போன்ற திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார். இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு ஸ்னேகா திரைப்படங்களில் பெரியதாக நடிக்கவில்லை.

தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். தற்போது மாடர்ன் உடையில் செம மாஸ் ஆன புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.