பட்டுப்புடவையில் அழகு தேவதையாக பலபலக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை சினேகா.

Actress Sneha in Traditional Saree : தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பப் பெண்ணாக மாறி விட்ட சினேகா சில கால இடைவெளிக்குப் பிறகு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் சினேகா அழகு குறையாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டுப் புடவையில் பளபளக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

சினேகாவின் அழகை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.