நடிகை சித்தி இட்னானி பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

Actress Siddhi Idnani latest photo viral:

Actress Siddhi Idnani latest photo viral:

தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சித்தி இட்னானி. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதள பக்கங்களிலும் பிசியாக இருந்து வரும் சித்தி இட்னானி அவ்வப்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அவர் சுடிதாரில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.