நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சித்தாரா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்தாரா. 1989 ஆம் ஆண்டு வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சித்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார். இறுதியாக இவர் விஷால் நடிப்பில் கடந்த 2014 இல் வெளியான பூஜை படத்திலும் அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்திருந்தார்.

அதன் பிறகு நான்கு ஆண்டுகள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த சித்தாரா தற்போது இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட் லிஸ்ட் படத்தில் நடிக்கிறார். சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்ட இருவர் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார், மைம் கோபி, சரத்குமார், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, கே ஜி எஃப் வில்லன் ராமச்சந்திரா என பல நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.