கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூலி படம் குறித்து பேசி உள்ளார்.அதில் பண்டிகை மற்றும் பிறந்த நாளில் வேலை செய்து கொண்டிருப்பது மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. நான் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருந்தேன்.மேலும் லோகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி உள்ளது.
இது மட்டுமில்லாமல் ரஜினி சார் உடன் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பது மட்டுமில்லாமல் பல விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
