இரண்டு பிரபல ஹீரோயின்கள் ஒன்றாக இணைந்து செல்பி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றனர் அது தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன். இருவருமே தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளனர்.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியில் வெளியான சாணி காயிதம் தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிகை பிரியங்கா மோகனோடு இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரியங்கா அருள்மோகன் அதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் போன்ற படங்களில் நடித்து டாப் ஹீரோயினியாக வளர்ந்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.