உடல் நலம் முன்னேற்றத்திற்காக பழனி முருகன் கோவிலில் சூடம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்த நடிகை சமந்தாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா தற்போது வரை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

அதனால் தற்போது சற்று உடல்நிலை தேறி இருக்கும் சமந்தா எப்போதும் போல் படப்பிடிப்பில் கலந்து கொள்வது உடற்பயிற்சி செய்வது என தனது பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தனது உடல்நிலை முழுமையாக குணமடைய வேண்டி பழனி மலையில் முருகன் கோயிலில் 600 படிகளுக்கு மேல் சூடம் ஏற்றியபடி பழனி முருகனை தரிசனம் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.