சகுந்தலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் ஃபோட்டோஸ் வைரல்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்ததை தொடர்ந்து அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் புராண கால காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தேவ் மோகன் நாயகனாக நடிக்க நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா நேற்றைய தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற சகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெள்ளை நிற புடவையில் அழகு தேவதையாக கலந்து கொண்டிருந்தார். நீண்ட நாட்கள் கழித்து சமந்தாவை கண்ட ரசிகர்கள் அவரது புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/Miss_epicqueen/status/1612689467311271942?t=Ikc3YkmWd9sD0dGPzj24Tg&s=19