நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் யசோதா திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மணி சர்மா இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வாடகை தாய் மோசடியை மையமாக வைத்து புதுமையாக உருவாகி இருக்கும் இப்படத்தை பலரும் வரவேற்றுள்ளனர். இதனால் தியேட்டரில் இப்படத்திற்கான எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ₹33 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் மூலம் அதிகாரவபூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மிகுந்த அன்பிற்கு அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.