நடிகை சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா. இவரது நடிப்பில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மணி சர்மா இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நடிகை சமந்தா தனது நன்றியை பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

அதில் அவர், நீங்கள் என்மேல் காட்டும் அன்புக்கு நன்றி. நீங்கள் எல்லோரும் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் படத்தை ரசிக்கிறீர்கள் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.