தனது உடல்நிலை முன்னேற்றம் குறித்து நடிகை சமந்தா பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின் களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் மயோசிட்டிஸ் என்னும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிவித்திருந்த சமந்தா தற்போது வரை அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேதியுள்ள சமந்தா மீண்டும் தனது படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி பரபரப்பாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் இணைந்து நடித்து வரும் சமந்தா சமீபத்திய நேர்காணலில் முன்பை விட தனது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும் , விரைவில் பூரணமாக குணமடைந்து விடுவேன் என்றும் தனது உடல் நலம் குறித்து நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் சமந்தாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.