விளம்பரத்திற்காக பறந்து கொண்டு சண்டையிடும் காட்சியின் மேக்கிங் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து தற்போது இந்திய அளவில் மாபெரும் பிரபலமான நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சகுந்தலம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் விரைவில் சூப்பர்ஹிட் படத்துடன் கம் பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் அடுத்ததாக விஜய் தேவர்கொண்டா உடன் குஷி படத்தில் நடித்து வரும் சமந்தா தற்போது இந்தியில் உருவாகும் “சீட்டாடல்” எனும் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். உடல் நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிப்பில் வேகம் வரும் நிலையில் படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் பிரபல குளிர்பானம் தொடர்பான விளம்பரத்தில் நடித்திருக்கும் சமந்தா அந்த விளம்பரத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் பறந்து கொண்டும் சண்டையெல்லாம் போட்டுள்ளார். அதன் மேக்கிங் புகைப்படங்களை சமந்தா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.