Regina

Actress Regina : நடிகையுடன் ஓரின சேர்க்கையாளராக பிரபல தமிழ் நடிகை நடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் ரெஜினா.

கவுதம் கார்த்திக்குடன் சேர்ந்து Mr. சந்திரமௌலி படத்தில் படு கிளாமராக நடித்திருந்தார்.இதனையடுத்து ரெஜினாவின் மார்க்கெட் சூடு பிடிக்க தொடங்கியது.

சமீபத்தில் கூட விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடித்து வெளியாகி இருந்த சிலுக்குவார் பட்டி சிங்கம் படமும் ரெஜினாவிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது ரெஜினா பாலிவுட்டில் சோனம் கபூருடன் சேர்ந்து லெஸ்பியனாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் சோனம் கபூர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’. இந்த படம் லெஸ்பியன் காதலை பற்றி பேசும் படம்.

சோனம் கபூருக்கு லெஸ்பியன் ஜோடி யார் என்பது இது நாள் வரை ரகசியமாக வைக்க பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில் அது யார் என்பது தெரிய வந்துள்ளது.

ஆம், அது வேறு யாரும் இல்லை.. ரெஜினா தான்.கோலிவுட்டில் மார்க்கெட் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது பாலிவுட்டில் ஓரின சேர்க்கையாளராக நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.