நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகை ராஷி கண்ணா நடிகர் கார்த்தி உடன் இணைந்து சர்தார் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதால் அதற்கான பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது சினிமா பயணம் குறித்து அவர் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், “எனது சினிமா பயணம் நன்றாக உள்ளது, நான் நடித்த படங்கள் தோல்வி அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. நான் நிராகரித்த படங்கள் வெற்றியடைந்தாலும் வருத்தப்பட மாட்டேன். நினைத்ததை எல்லாம் சாதிக்க, இன்னும் இருவது ஆண்டுகள் சினிமாவில் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் பேய் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.