Actress Rajkiran Photo

தாடியும் மீசையுமாக அகோரி போல மாறி உள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

Actor Rajkiran Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ராஜ்கிரண். ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் இயக்கி நடித்த பாண்டி படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவர மத்தியிலும் பேசப்பட்டார். இவரது நடிப்பில் அடுத்ததாக விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ராஜ்கிரண் தாடியும் மீசையுமாக கிட்டத்தட்ட பார்ப்பதற்கு அகோரி போலவே காட்சியளிக்கும் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது ஏதாவது புதிய படத்திற்கான கெட்டப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.