ரக்ஷிதா வெளியிட்ட எமோஷனல் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் தினேஷுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா. இருவரும் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இணைந்து நடித்து பிறகு காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பாடலுக்கு கண்கள் கலங்கியபடி இருக்கும் வீடியோவை பதிவிட்டு அதில், வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக எனக் கூறி

“கடந்த காலங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள். இந்த மௌன போர்கள், உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உங்கள் தாழ்த்திக் துடைத்துக் கொண்டு.. உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள். பாடலில் ஆழமாக போகிறேன் கண்களை நிறைக்கும் அந்த மந்திர வரிகள்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அவரது அந்த பதிவினை கண்ட ரசிகர்கள் ரக்ஷிதாவுக்கு கமெண்ட் மூலம் ஆறுதலை குவித்து வருகின்றனர்.