![images (1)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/06/images-1-5-696x365.jpeg)
தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பூர்ணா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் இவர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/06/images-9.jpeg)
தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய வருங்கால கணவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலமாக அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார்.
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் அசிப் அலி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். தன்னுடைய வருங்கால கணவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்பதால் தன்னுடைய பெயரையும் ஷம்னா காசிம் என மாற்றிக் கொண்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/06/images-2-6.jpeg)
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.