குத்துப்பாட்டு என்றாலே உற்சாகம் பிறக்கிறது.. பூஜா ஹெக்டே ஓபன் டாக்..!

Web Ads

குத்துப்பாட்டு என்றாலே உற்சாகம் பிறக்கிறது என்று பேசியுள்ளார் பூஜா ஹெக்டே.

actress pooja hegde latest speech update
actress pooja hegde latest speech update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தால் இவரது ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது.

இது மட்டும் இல்லாமல் இந்தப் பாடலுக்கு பூஜா ஹெக்டே இரண்டு கோடி சம்பளம் வாங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அனைவராலும் கவரப்பட்ட மோனிகா பாடல் குறித்து இவரிடம் கேட்டபோது அதற்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது குத்துப்பாட்டு என்றாலே ஒரு உற்சாகம் பிறக்கிறது என்றும் அதில் மயக்கும் நடனம் ஆடுவது எனக்கு பிடித்திருக்கிறது பாலிவுட் போல தென்னிந்திய சினிமாவிலும் குத்து பாடல்கள் பிரபலமாகி உள்ளது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

actress pooja hegde latest speech update
actress pooja hegde latest speech update