நடிகர்கள் பற்றி ஓப்பனாக பேசியிருக்கும் நித்யா மேனனின் பேட்டி வைரல்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருக்கும் இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், இருமுகன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். ஆனால், தாய்க்கிழவி பாடல் வரவேற்பை தொடர்ந்து தன்னை தாய்கிழவி என அழைக்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. அப்படி கூப்பிட வேண்டாம் என அண்மையில் ஒரு வீடியோ பதிவின் மூலம் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நித்யா மேனனிடம் செய்தியாளர் ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிக்கும்போது, போட்டி பொறாமை ஏற்படுமா? எனக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், இரு நாயகிகள் ஒன்றாக நடிக்கும் போது நல்லா இருக்கும். சந்தோஷமாக பேசிக்கொள்வோம். ஆனால், போட்டி பொறாமை இருப்பது என்னவோ நாயகர்களுக்கு தான். இரு நடிகர்கள் இணைந்து நடிக்க மாட்டார்கள். நடித்தாலும் எனக்கு தான். உனக்கு தான் என சண்டை தான் போட்டு கொள்வார்கள் என ஓபன் ஆக நடிகர்கள் பற்றி கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.